
பெப்ரவரி - 04, இனிதே உதயமானது
பலருக்கு சந்தோசம் - விடுமுறை
என்பதனால்
பெட்டிக்குள் பூட்டப்பட்டிருந்த சிங்கம்
கம்பத்தில் கட்டப்பட்டு - பறக்க
விடப்படும் நாள்
சிங்கத்திற்கு சுதந்திரம் கொடுத்து
சுதந்திர தினமென்று பரைசாற்றும் - நாள்
இந்நாள்
எனக்கு இந்த நாள் கொடுத்த மரியாதை,
எல்லா நாட்களிலும் கிடைக்காதா? - என்று ஏங்குகிறது
கொடியிலுள்ள சிங்கம்
இன்று நாள் முடிகிறது. சிங்கம் இறக்கப்படுகிறது. மீண்டும்
கூட்டில் அடைக்கப்படுகிறது. - அதற்கு
ஒரு வருடம் கழித்தே சுதந்திரம்
பெப்ரவரி - 04 வருவதை விட,
பெப்ரவரி - 14 வருவதை எதிர்பார்ப்பவன்
இங்கு அதிகம்
உன் தாயை காதலிக்காத நீ
எவளோ ஒருத்தியை காதலிக்க - துடிப்பது
கொடுமை
இந்த பூமி உனக்கு கொடுத்ததை
உன்னால் உணர முடியாவிட்டால் - இந்த
பூமிக்கு நீ பாரம்
காற்று இருப்பதை வியர்வைதான்
ஞாபகப்படுத்த வேண்டுமா? - ஏன்
சுவாசத்திற்கு தெரியாதா?
kaathalarkalukku arumaiyaana suutu. suthanthiram parri arumaiyaana kavithai . feb 14 erpatuththum mokam kuraiya anaivarum patupatuvom. nangkal kaathalukku ethiri alla .
பதிலளிநீக்கு